43 சவரன் தங்கம், 9 தங்கக்காசு, 2.75 கிலோ வெள்ளி.. சென்னையை பரபரப்பாக்கிய ’மாயம்’
அரசு வங்கி லாக்கரில் வைத்திருந்த 43 சவரன் தங்க நகைகள், 9 தங்கக்காசு, 2.75 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருப்பதாக வங்கி ஊழியர் புகார் அளித்துள்ளார். சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். அண்ணாநகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிளார்க்காக பணியாற்றும் இவர், தான் பணியாற்றும் அதே வங்கியில் உள்ள லாக்கரில் நகைகளை வைத்துள்ளார். இந்நிலையில் தனது லாக்கர் வேறொருவருக்கு ஒதுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள அசோக்குமார்,,, நகைகளை காணவில்லை என அளித்துள்ள புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story