பிரசவத்திற்கு பின் பெண்ணுக்கு நேர்ந்த கதி.. உறவினர்கள் எடுத்த திடீர் முடிவு..

x

சுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த மைதிலிக்கு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் 22 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ரத்த போக்கு அதிகமாக இருந்த காரணத்தினால் கோவை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட மைதிலி 28 ஆம் தேதி உயிரிழந்தார். நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அடக்கம் செய்ய கொண்டுவரப்பட்டது. அப்போது மைதிலி உடலை போலீசார் மயானத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடலை அடக்கம் செய்ய மறுத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மைதிலி இறப்புக்கு நீதி கேட்டு, கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இறந்த மைதிலி குடும்பத்துக்கு நிவாரண தொகை வழங்க கோரியும் மனு அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் சிவானந்தம் உறுதியளித்ததும் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் ஒப்புக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்