சிறுநீர் கழிக்க சென்ற Swiggy ஊழியர் - 17 வயது சிறுவன் செய்த காரியம்
சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் ஸ்விகி ஊழியரை சுமார் 2 மணி நேரம் கொடூரமாக தாக்கி அவரிடம் பணம், செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தை சேர்ந்த கணேஷ் என்ற இளைஞர் மேடவாக்கத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இயற்கை உபாதை கழிக்க வடக்குப்பட்டு பகுதிக்கு சென்ற கணேஷை வழிமறித்த ஆறு பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக தாக்கி 10 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு செல்போன், இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு தப்பியுள்ளனர். இதில் ஒரு சிறுவனை மட்டும் பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Next Story
