ஷங்கருக்கு ஷாக்... சிக்கலில் கேம் சேஞ்சர் ... ஆவேசத்தில் கன்னட அமைப்பினர்... பரபரக்கும் டோலிவுட்

x

தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள முதல் நேரடி தெலுங்கு படமான 'கேம் சேஞ்சர்' வரும் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஊழலுக்கு எதிராக போராடும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ள இந்த படம், தெலுங்கில், தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஆனால், கன்னட மொழியில் வெளியாவதாக தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், கர்நாடகா முழுவதும் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியிலேயே திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. ஒரு பெரிய நடிகர் மற்றும் இயக்குநரின் படம், தங்கள் மாநில மொழியில் வெளியாகாததிற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கன்னட மொழியில் படம் இல்லாத‌தை கண்டித்து, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த 'கேம் சேஞ்சர்' படத்தின் போஸ்டர் மீது கருப்பு மை ஸ்பிரே அடித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்