கன்னியாகுமரி டூ ராமநாதபுரம் வரை.. 3 நாட்கள் - மனு பெற நேரில் சென்ற மத்திய அமைச்சர்கள்
கடலோரப் பயணத்தின் எட்டாவது கட்டத்தினை மத்திய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபலா, எல்.முருகன் ஆகியோர், கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டனம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தொடங்கினர். மீனவர்களின் இருப்பிடத்துக்கே சென்று அவர்களின் கோரிக்கைகளை பெறுவதற்காக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், மூன்று நாட்கள் மீனவ மக்களை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அகஸ்தீஸ்வரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எல்.முருகன், மீன்வளத் துறையில் 38 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
Next Story