ஊருக்குள் காட்டு யானை நடமாட்டம்.. புதிய AI டெக்னாலஜியை களமிறக்கிய வனத்துறை

x

ஊருக்குள் காட்டு யானை நடமாட்டம்.. புதிய AI டெக்னாலஜியை களமிறக்கிய வனத்துறை

AI தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன கேமராக்கள் மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் முதல்கட்ட திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு உட்பட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ளதால், அவற்றை கண்காணிக்க AI தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன கேமராக்கள் வட்டப்பாறை, தர்மகிரி உள்ளிட்ட 5 இடங்களில் பொருத்தப்பட்டன. சுமார் 8 லட்சம் மதிப்பில், சோலார் மூலம் 180 டிகிரியில் இயங்கும் சென்சார் பொருத்தப்பட்ட கேமராக்கள், யானையின் நடமாட்டத்தை கண்காணிப்பதுடன், ஒலி எழுப்பியும், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி எச்சரிக்கை செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வட்டப்பாறையில் யானை நடமாட்டத்தை கண்காணித்த கேமரா திட்டமிட்டபடி பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தது. முதல் கட்டத்திலேயே திட்டம் வெற்றி பெற்றதால் யானை நடமாடும் பகுதிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த வனத்துறை திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்