கிடு, கிடுவென உயர்ந்த மல்லிகைப்பூ விலை | Flower

x

கிடு, கிடுவென உயர்ந்த மல்லிகைப்பூ விலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர்ச்சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை பெய்யாததாலும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும், பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. மலர்ச்சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளதால், ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கேரள வியாபாரிகள் அதிக அளவில் வந்து பூக்களை ஏலம் எடுத்துச் செல்வதும் மல்லிகைப்பூ விலை உயர்வுக்கு காரணம் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்