ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.
அந்த பகுதியில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டு, நெல் விளைந்து, இன்னும் பத்து நாட்களில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த நிலையில், இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இதே நிலை நீடித்தால் நெல் பயிர்கள் அழுகி நெல்மணிகள் முளைத்து விடும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர், எனவே, தமிழக அரசு நேரில் ஆய்வு செய்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story