இன்றுவரை ஃபெஞ்சலின் உக்கிரத்தில் இருந்து மீளாத கிராமம்..இதை பார்த்தால் உங்களுக்கே மனம் கலங்கும்

x

பாப்பிரெட்டிபட்டி அருகே சித்தேரி மலைப்பகுதியில் 63 குக்கிராமங்கள் உள்ளன. அண்மையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், தோல் தூக்கி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, நெடுஞ்சாலை துறை சார்பில் 100 மணல் மூட்டைகளை அடுக்கி சாலை சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் சித்தேரி மலைப்பகுதியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் தோல் தூக்கி அருகே மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதுடன், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 55 கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு, கனரக வாகனங்கள் பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், அழகூர் கிராமத்தை சேர்ந்த 75 வயதாகும் நல்லம்மாளுக்கு காலில் அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் சாலையில் முழங்கால் அளவுக்கு சேறும் சகதியுமாக உள்ள சூழலில், நல்லம்மாளை, அவரது உறவினர்கள் கட்டிலில் வைத்து தூக்கிக்கொண்டு சித்தேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சேர்த்தனர். உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்