நகர ஆரம்பித்ததுபுயல் சின்னம்.. கரையை கடக்கும் இடம், தேதி தெரிந்தது.. 70 கிமீ வேகத்தில் காற்று வீசும்

x

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 2 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று 5.30 மணி அளவில் அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது...

திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கே 110 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 310 கி.மீ. புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 480 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது...

இது அடுத்த 12 மணி நேரத்தில் இலங்கை கடற்கரையை ஒட்டி வடக்கு-வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு....

அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும்...

அப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும்


Next Story

மேலும் செய்திகள்