அசுர வேகம்..நாளை ஃபெங்கல் காட்டப்போகும் வேறுமுகம்..எதற்கும் ரெடியா இருங்க | Chennai | Fengal Cyclone

x

சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் 800 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

தென்னிந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறைப்படி இந்த முறை சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த “FENGAL“ என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 590 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 710 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்