BREAKING || கடலுக்குள் டைம் குறித்த `ஃபெங்கல்’ - கவுண்டவுன் ஸ்டார்ட்.... திடீர் வேகம் திக் திக்
சென்னைக்கு 550 கி.மீ. தொலைவில்... சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 550 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 13 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது....
நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையில் திரிகோணமலையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 120 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது...
தொடர்ந்து ஒரே வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை 5:30 மணிக்குள் புயலாக வலுப்பெற வாய்ப்பு...
Next Story