பெஞ்சல் புயலால், பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

x

பெஞ்சல் புயலால், பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும்,

முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும் வலியுறுத்தியுள்ளார்.

நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிட முடிவு செய்யப்பட்டது.

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் அதற்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 22,500 ரூபாய் வழங்கிடவும்,

மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 8,500 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

எருது , பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக 37,500 ரூபாய் வழங்கிடவும்,

வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு 4 ஆயிரமும், கோழி உயிரிழப்பு நிவாரணமாக 100 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்,

மழை வெள்ளத்தால் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய

சான்று வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

End

குடும்ப அட்டைக்கு ரூ.2000 நிவாரணம்

நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நிவாரணத்தொகை வழங்க முடிவு

புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம்

சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.10,000

முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை

நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் அதற்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500

மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500

எருது , பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணம் ரூ.37,500

வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு ரூ.4000

கோழி உயிரிழப்புக்கு ரூ.100

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2000

வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்று வழங்க உத்தரவு

பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்க உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்