தமிழகத்தை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் - ராகுல் போட்ட ட்வீட்
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலின் பேரழிவு செய்தி அறிந்து கவலை அடைந்தேன் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த சோக சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், புயல் பாதித்த தமிழகத்திற்கு முடிந்தவரை நிவாரண பணிகளில் உதவ வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
Next Story