12 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட சென்னை ஏர்போர்ட்

x

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது. இன்று அதிகாலை 4 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களின் மேலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புயல் கரையைக் கடந்து, வானிலை சீரடைந்ததால் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் 3 மணி நேரத்துக்கு முன்னதாக, நள்ளிரவு 1 மணிக்கு விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. முதல் விமானம் குவைத்திற்கு அதிகாலை 5.18 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. எனினும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு என, 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருப்பி விடப்பட்ட 20 விமானங்கள் மீண்டும் சென்னைக்கு வர தொடங்கின. விமான சேவை முழுமையாக சீடைய ஒரு நாள் ஆகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்