கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மகனை ரத்த காவு வாங்கிய அப்பா.. ரத்தமாரே ஜாக்கிரதை

x

வேப்பூர் அடுத்துள்ள பாசார் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். 80 வயதான இவருக்கும், 47 வயதான மகன் முத்துசாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதனால்

வீட்டை விட்டு வெளியே சென்ற ஆறுமுகத்தை முத்துசாமி தடுக்க முயன்றுள்ளார். அப்போது, திடீரென கத்தியால் ஆறுமுகம் குத்தியதில், படுகாயத்துடன் முத்துசாமி மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, முத்துசாமியின் உடலை கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையே மகனை குத்தி கொலை செய்த‌து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்