பச்சிளம் குழந்தையை தூக்கி எறிந்த தந்தை.. வாயை துணியால் பொத்தியே கொன்ற தாய் - நடுங்கவைக்கும் பின்னணி

x

அரியலூரில் பாதி உடல் எரிந்த நிலையில், குப்பையில் பச்சிளம் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பெற்றோரே குழந்தையை தீயில் எரித்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவைச் சேர்ந்த தம்பதியான மதிவண்ணன் - திவ்யா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், வயிற்றில் கட்டி எனக் கூறிவந்த நிலையில், திவ்யாவிற்கு திடீரென வீட்டிலேயே குழந்தை பிறந்ததாகவும், பிறந்த குழந்தைக்கு தான் அப்பா கிடையாது என்ற ஆத்திரத்தில், குழந்தையை தூக்கி கீழே வீசியதாகவும் மதிவண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், கதறி துடித்த குழந்தையை தாயார் திவ்யா துணியைக் கொண்டு வாயை அடைத்ததில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து குழந்தையை, இருவரும் குப்பைத் தொட்டியில் போட்டு எரித்து விட்டதாகவும் மதிவண்ணன் போலீசிடம் கூறியுள்ளார். இந்த சூழலில், கைதான திவ்யா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில், கணவர் மதிவண்ணன் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்