NH-ஐ ஸ்தம்பிக்க வைத்த மறியல்..."என்னதான் ஆவது...? - ஆவேசத்தின் உச்சியில் பேசிய விவசாயி
விழுப்புரம் செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த விளை பொருட்களுக்கு லாட் ஒதுக்கி எடை போடாததால்
பாதிக்கப்பட்ட விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்... புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்த நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் மறியல் கைவிடப்பட்டது. மேலும் பணப்பயிர் கடந்த வாரம் பத்தாயிரம் ரூபாய் வரை விலை போன நிலையில், தற்போது மூட்டைக்கு ரூபாய் ஆயிரத்து 500 முதல் 2ஆயிரம் வரை மட்டுமே விலை போவதாகவும், கமிட்டி நிர்வாகம் வியாபாரிகளுடன் கமிஷன் பேசிக்கொண்டு குறைந்த விலையை நிர்ணயிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
Next Story