சோசியல் மீடியாவில் வைரலான விவசாயிகள் வீடியோ - கிளம்பிய பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் சமைத்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. 100 நாள் வேலை திட்டத்தில் சம்பள பாக்கி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் விவசாயிகள் கோபத்தில் அலுவலகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டாட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்த, விவசாயிகள் அமைதியாக கலைந்து சென்றனர்.
Next Story
