``மனுசன் எவ்ளோ விரக்தியில இருந்தா இப்படி பண்ணியிருப்பாரு?’’
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் டிராக்டரை கொண்டு காலி பிளவர் செடிகளை அழிக்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். திருமலாபுரம், கரிசல்பட்டி, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலிபிளவர் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காலிபிளவர் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதன் காரணமாக வரத்து அதிகரிப்பால் போதிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் காலிபிளவர் செடிகளை டிராக்டர் கொண்டு அழித்து வருகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story