தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு

x

திண்டுக்கல்லில், பெட்ரோலை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி செல்வமுருகனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விவசாயியுடன் மல்லுகட்டி தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். காட்டுப்பட்டியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர்கள் வேலுமணி, சரவண பிரசாத் ஆகியோர் தனது விளைநிலத்தை பாழ்ப்படுத்துவதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் போலீஸ் விசாரணையில் விவசாயி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்