ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு.. கலங்கி பேசிய திரை பிரபலங்கள் | evkselangovan
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமான நிலையில், அவரது நெருங்கிய நண்பரும், நடிகருமான மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, தந்தி தொலைக்காட்சி வாயிலாக தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்...
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு, கட்சிக்கு அப்பாற்பட்டு நட்பு பாரட்டியவர் என புகழாரம் சூட்டினார்.
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உருவப்படத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய அமைச்சரும், துணிச்சலான, கொள்கைகளில் சமரசமின்றி செயல்பட்ட தலைவராக திகழ்ந்த அவர், காங்கிரசின் கொள்கைகளையும், தந்தை பெரியாரின் சிந்தாந்தத்தையும் தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு அவர் செய்த அர்ப்பணிப்பு மிகுந்த பணிகள் என்றென்றும் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.