பரபரக்கும் ஈரோடு கிழக்கு.... சிக்கிய பணம்... தேர்தல் பறக்கும் படை அதிரடி

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான பறக்கும்படையினர் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து வரப்பட்ட அரசு ஒப்பந்ததாரர் சரவணனிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்டவை வழங்குவதைத் தடுக்க தலா 3 கண்காணிப்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சூழலில் தான், கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் இந்த பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்