ஈரோடு இடைத்தேர்தல்... தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

ஈரோடு இடைத்தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான மாற்று ஆவணங்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை,புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் பெறப்பட்ட ஸ்மார்ட் அட்டை,இந்திய கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் மற்றும் மத்திய அரசின் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக காட்டி வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்