கார் ஓட்ட பழகியபோது விபரீதம் - திரண்டு நின்ற ஊர் மக்கள்.. நள்ளிரவில் பரபரப்பு

x

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கார் ஓட்ட பழகும்போது ஏற்பட்ட விபத்தில் 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். முள்ளிக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர், கார் ஓட்ட பழகியபோது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கியது. தகவல்அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் மூழ்கிய சிவகுமாரை கிரேன் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்