"வேலைக்கு வராமல் சம்பளம் கொடுத்த ஊராட்சி செயலாளர்.." அதிரடி ஆக்‌ஷன் எடுத்த ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர்

x

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் ஊராட்சி செயலாளர் 50 லட்சம் ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஒரே கிராமத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்ய ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில், பிரம்மதேச ஊராட்சியில் 29 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக பணிபுரியும் சின்னசாமி என்பவர், பல்வேறு பணிகளில் 50 லட்சம் ரூபாய் வரை முறைகேடு செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வார்டு உறுப்பினர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்