முன்னாள் காதலனை கல்லூரி மாணவனுடன் சேர்ந்து கத்தியால் குத்திய காதலி - வெளியான அதிர்ச்சி பின்னணி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கல்லூரி மாணவருடன் சேர்ந்து முன்னாள் காதலனை காதலி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயிலை சேர்ந்த கூலி தொழிலாளி தருண்குமாரும், கல்லூரி மாணவியான சுபஸ்ரீயும் காதலித்து வந்த நிலையில், சுபஸ்ரீக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இது தெரிந்தும் தொடர்ந்து தருண்குமார் சுபஸ்ரீக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் தருண் குமாரை போனில் பேசி வரவழைத்து சுபஸ்ரீயும், அவரது உறவுக்காரரான தரணிதரனும் கத்தியால் தாக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story