இளம் பெண்ணிடம் அசிங்கமாக நடந்து கொண்ட காவலர்.. ஸ்டேஷன் மேசையில் அமர்ந்து திமிர் பேச்சு - தீயாய் பரவும் வீடியோ

x

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பவானிசாகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் கார்த்திக் என்பவருக்கும்,

ஈரோடு மைக்கேல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ராணி என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், காவலர் கார்த்திக், மதுபோதையில் ராணி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து ராணியின் வீட்டிற்கு சென்ற அந்தியூர் போலீசார், கார்த்திக்கை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரையும் மிரட்டி தகாத வார்த்தைகளால் கார்த்திக் பேசியுள்ளார். இந்நிலையில், ராணி கொடுத்த புகாரின்பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, காவல் நிலையத்தில் மேஜை மீது அமர்ந்து காவலர் கார்த்திக், மதுபோதையில் சக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்