சாப்பிடும் போது பாமக நிர்வாகி வீட்டுக்குள் பறந்து வந்த கற்கள்.. - நொறுங்கிய கார்..

x

ஈரோடு மாவட்டம் பவானியில் பாமக நிர்வாகி வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி காரை சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பவானி சௌடேஸ்வரி அம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் . பாமக நகர செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், தினேஷ்குமார் தனது குடும்பத்துடன் வீட்டில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, திடீரென மர்ம நபர்கள் வீட்டின் மீது கற்களை வீசிவிட்டு தப்பியோடினர். தினேஷ்குமார் வெளியே வந்து பார்த்தபோது, அவரது காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, காரில் இருந்த பாமக மற்றும் வன்னியர் சங்க‌க் கொடிகள் கிழித்து சேதப்படுத்தப்பட்டிருந்த‌து தெரிய வந்த‌து. தகவலறிந்து சென்ற போலீசார், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், ஏராளமான பாமகவினர் அந்த பகுதியில் குவிந்த‌தால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்