4 வயது மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை கைது

4 வயது மகனை பெட்ரோல்  ஊற்றி எரித்த தந்தை கைது

4 வயது மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை கைது


ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்செல்வன் சுகன்யா தம்பதி. இவர்களுக்கு ஏழு வயதில் ஒமிஷா என்ற பெண் குழந்தையும், 4 வயதில் நிகில் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் திருமலை செல்வன் அடிக்கடி குடித்துவிட்டு சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். விரக்தி அடைந்த சுகன்யா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்று, பொருளாதார தேவைகளுக்காக அருகே உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்து வந்து இருக்கிறார். சுகன்யாவின் தாய் வீட்டிற்கு வந்த திருமலை செல்வன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் சுகன்யா மற்றும் நிகில் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து இருக்கிறார். இதில் சுகன்யா அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில், நிகில் மீது பற்றிய தீயால் படுகாயம் அடைந்து இருக்கிறான். எழுபது சதவீத காயத்துடன் ​ு​நிகில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில் திருமலை செல்வத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மகனைப் பார்த்து சுகன்யா கதறி அழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்