ஈரோட்டில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் முத்துசாமி

x

ஈரோட்டில் பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி, பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கும் மரியாதை செலுத்தினார். இதேபோல், அம்பேத்கர், கருணாநிதி, அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்த கட்சியினரின் விருப்பத்தை தலைமைக்கு சொல்வோம் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்