அரசு நில ஆக்கிரமிப்பு - அதிகாரிகளுக்கு மிரட்டல் விட்ட நபர் - வெளியான அதிர்ச்சி வீடியோ காட்சி

x

ஈரோட்டில் உள்ள குறிஞ்சி மலைப்பகுதியில் சந்தன கடத்தல் வீரப்பனின் பெயரை கூறி அதிகாரிகளை மிரட்டி, தனிநபர் ஒருவர் 3 ஏக்கர் பரப்பிலான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் குறிஞ்சி மலை அமைந்துள்ளது. வனத் துறைக்கு சொந்தமான இந்த மலையில், சட்டவிரோதமாக தனி நபர் ஒருவர் ஜேசிபி மூலம் 3 ஏக்கர் பரபரப்பளவிலான நிலங்களை ஆக்கிரமித்து கான்கிரீட் தளம் அமைத்ததாகவும், அந்நிலங்களை வீட்டு மனைகளை விற்று பணம் சம்பாதித்து வருவதாகவும் குற்றம்சுமத்தப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி, அவற்றை விற்பனை செய்ததாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டது, மேலும், ஆக்கிரமிப்பு நிலத்தில் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் அமைத்த அந்நபர், புகாரின் அடிப்படையில் விசாரிக்க வந்த விஏஓ உட்பட அதிகாரிகளை ஆள்களை ஏவி மிரட்டி வந்ததாகவும் சொல்லபட்டது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு நிலங்களை ஆய்வு செய்து அளக்க சென்ற அதிகாரிகளுடன் நபர் அதிகாரை தோரணையில் மிரட்டி, வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகளும் வெளியாகி இருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்