மகளிர் இலவச பஸ்ஸில் கட்டணம் வசூல்...ரவுண்டு கட்டிய பெண்கள்... நடத்துனர் செய்த செயல்-வைரலாகும் வீடியோ
ஈரோட்டில், அரசு நகர பேருந்தில் மகளிர் இலவச பயணத்திற்கு பணம் வசூலித்த நடத்துனருடன், பெண் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வைரலாகியுள்ளது. பண்ணாரி நோக்கி இயக்கப்பட்ட அரசு நகர பேருந்தை, சிறப்பு பேருந்து என கூறி, பெண் பயணிகளிடம் நடத்துனர் தரணிதரன் கட்டணம் வசூலித்துள்ளார். தொடர்ந்து பண்ணாரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பெண் பயணிகள், மகளிர் இலவச பயணத்திற்கு எதற்கு கட்டணம் வசூலித்தீர்கள் என கேட்டு நடத்துனருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால், பணத்தை நடத்துனர் திரும்ப கொடுத்த நிலையில், புகாரின் பேரில் தற்காலிக நடத்துனர் தரணிதரன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story