சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - முதல் நாளில் 3பேர் வேட்புமனுத் தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளியன்று தொடங்கியது. முதல் நாளில், தேர்தல் மன்னன் பத்மராஜன், கோவையைச் சேர்ந்த நூர் முகம்மது, கரூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மதுர விநாயகம் ஆகிய 3 பேர் மனுதாக்கல் செய்தனர். அரசு விடுமுறை காரணமாக, வரும் 13, 17 ஆகிய தேதிகளில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வசதியாக, மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகிய இருவரிடமும் வேட்பு மனு தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Next Story