உடலில் டீசல் ஊற்றி த*கொலைக்கு முயன்ற சாலையோர வியாபாரியால் ஈரோடு ஆட்சியர் அலுவலக பரபரப்பு

x

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலையோ வியாபாரம் செய்ய இடையூறு செய்வதாக கூறி சாலையோர வியாபாரி டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்.,பழ வியாபாரியான இவர் பெருந்துறை செல்லும் சாலையில் சாலையோர பழ வியாபாரம் கடந்த மூன்று வருடங்களாக செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக வியாபாரம் செய்யும் இடத்தில் அருகில் உள்ளவர்கள் வியாபாரம் செய்ய இடையூறு ஏற்படுத்தி வந்ததால் மன உளைச்சல் அடைந்த வியாபாரி தினேஷ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது வியாபாரம் செய்யும் கடை அருகில் இரும்பு கடைக்கு வந்து செல்லும் அடையாளம் தெரியாத லாரி டிரைவர் வியாபாரம் செய்யக்கூடாது என்றும் வியாபாரம் செய்ய விடமாட்டேன் என்று மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தார்.இதன் பின்னர் தெற்கு காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்....


Next Story

மேலும் செய்திகள்