"இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்திவிட்டு, ஈபிஎஸ் நடிப்பது அபத்தம்" - அமைச்சர் கீதாஜீவன் காட்டம் | EPS

x

கல்லூரி மாணவியரிடமும்,பெற்றோர்களிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்வது, அருவருக்கத்தக்க செயல் என்று, அமைச்சர் கீதாஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாபல்கலைகழக மாணவி விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தில் அரசு, உரிய பதில் அளித்துவிட்ட போதும், தனது சுய அரசியல் ஆதாயத்திற்காக இல்லாத ஒன்றை இருப்பது போல, ஈபிஎஸ் வதந்திகளை பரப்பிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பின்னணியில் இருந்த அதிமுக பிரமுகர்களை காப்பாற்ற, பாதிக்கப்பட்ட பெண்களையே பகிரங்கமாக மிரட்டிய கொடூரம் நடந்ததை மக்கள் மறக்கவே மாட்டார்கள் என்று கூறியுள்ளார். உதவி கேட்டு வந்த பெண்ணை "மெயின் ரோட்டிற்கு வா" என முன்னாள் அதிமுக அமைச்சரே பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த அசிங்கமும், அதிமுக ஆட்சியில் தானே அரங்கேறியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்திவிட்டு தற்போது பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் போல எடப்பாடி பழனிசாமி நடிப்பது அபத்தம் என்று அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்