பெசன்ட்நகர் கடற்கரையை... தானே களத்தில் இறங்கி சுத்தம் செய்த ஆஸி., துணை தூதர்

x

சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் ஆஸ்திரேலிய துணை தூதரகம் தூய்மை பணியை மேற்கொண்ட‌து. இந்த நிகழ்வில், தமிழக அரசின் சுற்றுச்சூழல்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, ஆஸ்திரேலிய துணைத் தூதர் சிலாய் சாக்கி கலந்துகொண்டனர். ‘Clean Up Australia’ இயக்கத்துடன் இணைந்து, பொது இடங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை மாநகரம் கழிவுகள் மேலாண்மைத் துறையில் சிறப்பான முன்னேற்றம் காட்டி வருவதாக ஆஸ்திரேலிய துணை தூத‌ர் சிலாய் சாக்கி பாராட்டினார். இயற்கையை பாதுகாக்கவும் பராமரிக்கவும், கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் பங்கேற்றதாக சுப்ரியா சாஹு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்