முதுமலையில் கம்பீர நடைபோட்டு வந்த ஒற்றைக் காட்டு யானை! - தமிழக வனத்துறை அதிகாரி சொன்ன தகவல்

x

ஆம்பூர் அடுத்த தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய இரு காட்டு யானைகள் வனப்பகுதியையொட்டியுள்ள பொன்னப்பல்லி, சுட்டகுண்டா கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தின. அரங்கல்துருகத்தில் இரவுமுழுவதும் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.நீலகிரி முதுமலை புலிகள் காப்பக வழியே செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் வாகனங்களை வழிமறித்துக் கொண்டிருந்த ஒற்றை யானை, அதனை விரட்ட சென்ற வனத்துறையினரின் வாகனத்தையும் துரத்த ஆரம்பித்தது. சிறிது நேரம் துரத்திய நிலையில் சத்தம் எழுப்பி வனதுறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

மேட்டுப்பாளையம் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியால் வழித்தடம் மறைக்கப்பட்டதால், கல்லாறு வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் தவித்து, பாதை மாறி இரவு நேரத்தில் வழி தெரியாமல் ஊருக்குள் பாகுபலி காட்டு யானை உலாவிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

தென்னிந்தியா முழுவதும் நடந்த யானை கணக்கெடுக்கும் பணி முடிவடைந்தது. அதிகாரப்பூர்வ எண்ணிக்கை விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் முழு ஒத்துழைப்பு வழங்கிய கேரள, கர்நாடக, ஆந்திர மாநில வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்து தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, தனது எக்ஸ் பக்கத்தில் முதுமலை வனப்பகுதி நடுவே ஒற்றைக் காட்டு யானை கம்பீரமாக நடைபோட்டு தண்ணீரைத் தேடி வந்த காட்சியை பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்