"கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிர் போயிருக்கும்.."வெளியான அதிர்ச்சி வீடியோ | Kovai | Elephant

x

"கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிர் போயிருக்கும்.."வெளியான அதிர்ச்சி வீடியோ | Kovai | Elephant

கோவை மாவட்டம் காரமடை அருகே வனத்துறையினரை விரட்டிய காட்டுயானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, கட்டாஞ்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள தோட்டத்தில் காட்டு யானைகள் கூட்டம் நுழைந்தது. அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்த, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக வனத்துறையினர் வந்திருந்தனர். அப்போது, டார்ச்லைட் அடித்து விரட்ட முயன்றபோது, வனத்துறை ஊழியர்களை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானைகள் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்


Next Story

மேலும் செய்திகள்