அட்டூழியம் செய்யும் புல்லட் யானை..கொதித்தெழுந்த மக்கள் வைத்த கோரிக்கை | Nilgiris | Elephant
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் புல்லட் என்று அழைக்கப்படும் காட்டு யானை அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், வனத்துறையினர் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். இரவு நேரங்களில் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உணவு பொருட்களை உண்பதற்காக வீடுகளை உடைப்பது, மனிதர்களை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், யானை ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, நாளை 26ம் தேதி பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியில் வனச்சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, பொதுமக்களை அழைத்து வனத்துறையினர் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story