பசிக்காக ஊருக்குள் வந்த கூட்டம் - 30 அடி ஆழத்தில் விழுந்த குட்டி - கண் கலங்க வைக்கும் பாசப்போராட்டம்

x

நீலகிரி பந்தலூர் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் இரவு யானைக்கூட்டம் ஒன்று இரைதேடி வந்தது... அப்போது அப்பகுதியில் உள்ள 30 அடி கிணற்றிற்குள் குட்டி யானை ஒன்று தவறி விழுந்து தத்தளித்தது... அதைக் கண்ட தாய் யானையும், உடன் வந்த சக யானைகளும் யானையை மீட்க பாசப்போராட்டம் நடத்தின. மேலும் யானைகள் அனைத்தும் ஆங்காங்கே பிரிந்து நடமாடியதால் அப்பகுதியில் வனத்துறையினர் போக்குவரத்தை நிறுத்தினர். பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது...

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 3 வீடுகளை தாய் யானை கோபத்தில் உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது... வனத்துறையினர் கிணற்றின் அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்... தாய் யானை வருவதை கண்டறிய வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்