காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரை 2 கி.மீ.க்கு தூக்கி சென்ற வனத்துறையினர்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பென்னை கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சென்னா காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். பந்தலூர் அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்வதற்காக சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சுமார் இரண்டு கிலோமீட்டர் மலைப்பாதையை கடந்து அவரது கிராமம் உள்ளதால் வனத்துறையினர் அவரது உடலை ஒற்றையடி மலைப்பாதையில் சிரமத்துடன் கொண்டு சென்றனர். பின்பு உடலோடு அங்குள்ள சிறிய ஆற்றை வனத்துறையினர் கடந்தனர். தொடர்ந்து அவரது கிராமத்திற்கு உடலைக் கொண்டு சென்று, குடும்பத்தினரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். பின்னர் தமிழக அரசின் இழப்பீட்டுத் தொகையான 10 லட்சம் ரூபாயில் முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதியவரின் குடும்பத்தினரிடம் வனத்துறையினர் வழங்கினர்.
Next Story