உணவு தேடி ஊருக்குள் படையெடுத்த யானை கூட்டம்..! வெளியான அதிர்ச்சி வீடியோ.. பீதியில் மக்கள்

x

கோவையில் உணவுதேடி வீதிகளில் காட்டு யானைகள் குட்டிகளுடன் நடமாடியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்... தொண்டாமுத்தூர், வடவள்ளி, மருதமலை, தடாகம் போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே யானைகள் முகாமிட்டு உணவு தேடி ஊருக்குள்ளும், விலை நிலங்களிலும் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர்... நேற்று முன்தினம் இரவு குட்டிகளுடன் 6 யானைகள் தடாகம் அருகே சோமையம் பாளையம் குடியிருப்பு பகுதியில் வீதிகளுக்குள் உணவு தேடி வரிசையாக நடந்து சென்றுள்ளன. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்