பசுமாட்டை விரட்டிய `படையப்பா' - கேரளாவில் பரபரப்பு | Kerala | Elephant Viral Videos
மூணாறு பகுதியில் தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வரும் படையப்பா யானை, பசு மாட்டை விரட்டும் விடியோ காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு பகுதியில் நயமங்காடு எஸ்டேட் அமைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக படையப்பா யானை இப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இப்பகுதி மக்கள் படையப்பா யானையை விரட்ட கோரிக்கை வைத்துள்ள நிலையில், மேய்ச்சலில் ஈடுபட்டு வந்த பசுமாடு ஒன்றை படையப்பா யானை விரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
Next Story