தமிழகத்தை அதிரவைத்த ரூ.1000 கோடி மோசடி..கசிந்த டாப் சீக்ரெட்..அடுத்த நிமிடமே அதிரடி காட்டிய ED ..

x

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆயிரம் கோடி ரூபாய் சைபர் மோசடியில் மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது புலன் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக, மேற்கு வங்கத்தில் 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கொல்கத்தாவில் உள்ள பார்க் ஸ்ட்ரீட், சால்ட் லேக், பாகுய்ஹாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து இடங்களிலும், பிற மாவட்டங்களில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. சால்ட் லேக் பகுதியில் சோதனையின் தொடர்ச்சியாக ஒருவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்