காட்பாடி வீட்டில் ED ரெய்டு - வக்கீலுடன் துரைமுருகன் அவசர ஆலோசனை
காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை போலீசார் சோதனை.
காட்பாடி காந்தி நகரில் உள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு, கிங்ஸ்டன் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் வீடு மற்றும் கிடங்கு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை போலீசார் 35க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Next Story