ஃபுல் போதையில் இளைஞர்கள் செய்த காரியம் - அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
ராசிபுரம் அருகே மதுபோதையில் இறைச்சி கடைக்கு சென்று இளைஞர்கள் ஊழியரை தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர், ஆண்டகலூர்கேட் பகுதியில் உள்ள கடைக்கு மதுபோதையில் சென்று ஒரு கிலோ கோழி இறைச்சி கேட்டுள்ளனர். கடை ஊழியர் சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கியபோது, மதுபோதையில் இருந்த இளைஞர்கள் என்ன கறி வெட்டுகிறாய் எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். உரிமையாளர்கள் ஊழியரை மீட்ட நிலையில், புகாரின்பேரில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story