வெறும் தோசை கல்லும் ரெண்டு கிண்ணமும் தான்.. ஹோட்டலை அலறவிட்ட டிரம்ஸ் சிவமணி

x

பெங்களூர் நகரின் பிரபல உணவகமான வித்யார்த்தி பவனுக்கு சாப்பிட வந்த டிரம்ஸ் சிவமணி உணவகத்தின் சமையல் அறையையே இசை மேடையாக மாற்றி தனது திறமையை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த உணவகத்திற்கு காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்காக சென்றிருந்த பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி, உணவகத்தின் சமையல் கூடத்திற்குள் சென்று அங்கு இருந்த தோசை கல்லில் சில கிண்ணங்களை வைத்து கர்நாடக இசையை வாசித்துக் காட்டி அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்