மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை - கோவையை அதிர வைத்த இருவரை விரட்டி பிடித்த போலீஸ்
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போதை பொருட்களை விற்பனை செய்து வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். வாகன சோதனையின் போது போலீசாரை பார்த்ததும் தப்பியோடிய 2 பேரை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இருவரும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என தெரியவந்தது..
Next Story