அம்பேத்கர் நினைவு நாளில் நேரில் சந்தித்து பேசி கொண்ட பிரதமர் மோடி-கார்கே
அம்பேத்கரின் 69ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ்
எம்பிக்கள் உடன் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் நினைவு தினமான டிசம்பர் 6ஆம் தேதியை மத்திய அரசு மகா பரிநிர்வான் தினமாக அனுசரிப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story